சென்னை:

கில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியில், போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 2 நாட்களாக விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

நேற்றும், இன்றும் ஏராளமான காங்கிரசார்  விருப் பமனுக்கள் அளித்துள்ளனர்.  இதுவரை 249 பேர் விருப்பமனு  அளித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். பலர், ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட  வேண்டும் என்றும்  விருப்பமனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராகுலின் கன்னியாகுமரி வருகை தமிழகத தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ராகுல் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

ராகுல் காந்தி பெயரில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி தொகுதியில் விருப்ப மனுக்களும் கட்சியினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், லோக்சபா  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலைக் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இதில் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிடப்போவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட போவதாக தகவல் வெளியானதையடுத்து தற்போது தென்னிந்திய மாநிலங்களிலிருந்து ராகுல்காந்திக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.