கிஷன் கஞ்ச்

பாஜக இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வரச் சதி செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் மேற்கொண்டு வரும் நடைப்பயணம், இன்று பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தது. இந்த யாத்திரை சீமாஞ்சல் பகுதிக்கு உட்பட்ட மாவட்டங்களில் ஒன்றான கிஷன்கஞ்ச் மாவட்டத்தில். இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்த மாவட்டம், காங்கிரசின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது.

இந்த மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி,

”பாஜக தொடர்ந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.  தற்போதைய யுஜிசி யின் புதிய வரைவில் உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்  சி,  எஸ் டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை முடிவுக்குக்  கொண்டு வரச் சதி நடக்கிறது.  

பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் ஏற்கனவே இட ஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனப் பேசி வருகிறது.  இந்நிலையில் இது போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை பறிக்க நினைக்கின்றன. 

இது சமூக நீதிக்காகப் போராடும் மாவீரர்களின் கனவுகளைக் கொன்று தாழித்ஹப்பட்டவர்கைன் பங்களிப்பு எங்கும் இல்லாமல் செய்ய நடக்கும் முயற்சி ஆகும்..  இத்தகைய பாஜகவின் குணா திசயம் உண்மையான நீதிக்கும் கொடையாளர் அரசியலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும்.

இத்தகைய செயல்களைக் காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது.  நாங்கள் சமூக நீதிக்காகத் தொடர்ந்து போராடுவோம் .  இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதியான பிரிவினர்களைக் கொண்டு மட்டுமே காலி இடங்களை நிரப்ப வேண்டும்” 

எனத் தெரிவித்துள்ளார்.