டில்லி:
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக 90-வயது மோதிலால் வோரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்து வந்த ராகுல்காந்தி, லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், இடைக்கால தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மோதிலால் வோரா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.