திருவனந்தபுரம்:
பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி வேலை வாய்ப்புகளை ஏன் ஏற்படுத்தவில்லை? என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகப்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக தென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த் நிகழ்வை குறிப்பிட்டு காங்கிரஸ் தலிவர் ராகுல்காந்தி மோடிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், “8 சிறுத்தைகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு விட்டன. 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் ஏன் ஏற்படுத்தப்படவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.