டில்லி

கேரள முதல்வர் பினராயி விஜயனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.

கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.   காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு பகுதியில் இந்த நிலச்சரிவு கடுமையாக ஏற்பட்டது.   அப்போது ராகுல் காந்தி உடனடியாக கேரளாவுக்குச் சென்று சேதத்தை நேரில் பார்வையிட்டார்.

அப்போது ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாடு பகுதியில் நிவாரணப்  பணிகளை துரிதப்படுத்துமாறு மத்திய மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்தார்.   தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் டில்லி நகருக்கு வந்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சென்று சந்தித்துள்ளார்.   அப்போது ராகுல் காந்தி வயநாடு பகுதியின் நிவாரணப் பகுதி குறித்து கேரள முதல்வருடன் விவாதித்துள்ளார்.