டில்லி:

நாடு முழுவதும் வரும் இன்று ( 9ந்தேதி) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்த நிலையில், இன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

டில்லியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில், அகில இந்திய காங்கிஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பாராளுமன்றம் முடக்கப்பட்ட விவகாரம், வட மாநிலங்களில் எஸ்.டி., எஸ்.சி. சட்ட திருத்தத்திற்கு எதிரான பிரச்சினை, பின்பி முறைகேடு, சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம் போன்றவற்றால் மத்திய அரசை கண்டித்தும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டது.

அதன்படி இன்று நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரசார் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இன்று காலை காந்திசமாதி சென்ற அகில இந்திய ராகுல்காந்தி, அங்கு காந்தி சமாதியில் மரியாதை செலுத்தி விட்டு உண்ணவிரத மேடைக்கு வந்தார்.

டில்லியில் உள்ள ராஜ்காட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரத பந்தலுக்கு  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்து, கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து  உண்ணாவிரதம்  மேற்கொண்டார்.

அவருடன் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, முன்னாள் டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், பி.சி.சாக்கோ, டில்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அஜெய் மக்கான், மற்றும் மத்திய  மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்  முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

அதுபோல தமிழகம் உள்பட அனைத்து மாநில தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதற்கிடையில்,  காங்கிரஸ் கட்சியின் உண்ணாவிரதம் எதிர்த்து  12-ம் தேதி பாஜக எம்.பி.க்கள் உண்ணா விரதம் போராட்டம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.