குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000 வழங்கும் திட்டத்தை மைசூரில் இன்று ராகுல் காந்தி துவக்கி வைத்தார்.
கர்நாடக அரசின் கிரக லட்சுமி திட்டத்தை மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் துவக்கினார்.
இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த ராகுல் காந்தி சிறப்பு விமானம் மூலம் மைசூரு சென்றார்.
#WATCH | Mysuru, Karnataka | Congress MP Rahul Gandhi transfers the amount into the bank accounts of the beneficiaries of Gruha Lakshmi Yojana, through direct benefit transfer (DBT).
The scheme was launched in the presence of Congress President Mallikarjun Kharge and him, here. pic.twitter.com/Be1XZ7Mddl
— ANI (@ANI) August 30, 2023
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த திட்டத்தை ராகுல் காந்தி துவக்கி வைத்தார்.
எந்தவித பந்தாவும் இல்லாமல் எளிமையாக பெரியவர்களையும் ….சிறியவர்களையும் மதிக்கும் அந்த மாண்பு தலைவர் #RahulGandhi அவர்களை எப்போதும் முன்னோக்கி கொண்டு செல்லும் ….🥰🥰🥰#Karnataka #GruhaLakshmiScheme #Congress pic.twitter.com/XV1EJ17N8i
— Phoenix Jayaseelan-INC🇮🇳 (@PhoenixJaiSeela) August 30, 2023
இந்த திட்டத்தின் மூலம் கர்நாடக மாநிலத்தில் 1.10 கோடி மகளிர் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.