டில்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றம் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்துள்ளார்.
சூரத் நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை அளித்ததை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம் பி பதவி பறிக்கப்பட்டது. அண்மையில் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்ததால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்ற ராகுல் நேற்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டார்
இன்று நாடாளுமன்ற மக்களவையில் 2-வது நாளாக நடைபெற்று வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பங்கேற்பதற்காகக் காலை 11.45 மணியளவில் தனது வீட்டில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காரில் புறப்பட்டார்.
ராகுல் காந்தி வீட்டை விட்டு வெளியே வந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்த வாகன ஓட்டி ஒருவரைப் பார்த்து தனது காரை நிறுத்த சொன்னார். அவர் காரை விட்டு இறங்கி வாகன ஓட்டியின் அருகில் சென்று அவரை தூக்கி விட்டு நலம் விசாரித்தார். இது பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.