வயநாடு
கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது..
கேரள மாநிலத்தின் வட எல்லையில் வயநாடு மாவட்டம் அமைந்து உள்ளது. இயற்கை எழில் மிகுந்த இடமாக திகழும் வயநாடு தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்கள் இணையும் இடமாக உள்ளது. வயநாடு நாடாளுமன்றத் தொகுதி கடந்த 2009 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, உருவானது.
இங்கு மானந்தவாடி (தனி), சுல்தான்பத்தேரி (தனி), கல்பெட்டா, கோழிக்கோடு மாவட்டத்தில் திருவம்பாடி, வயநாடு மாவட்டத்தில் ஈரநாடு, நீலம்பூர், வாண்டூர் (தனி) ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2009, 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஷானவாஸ் வெற்றி பெற்றார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முதல் முறையாக வயநாடு தொகுதி மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியிலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இதில் அமேதியில் மத்திய அமைச்சர்ஸ்மிருதி இராணியிடம் தோல்வி அடைந்தாலும் வயநாட்டில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 770 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி வெற்றி பெற்றார்.
அந்த தேர்தலில் ராகுல்காந்தியை எதிர்த்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான பாரதிய தர்ம ஜன கட்சி (பி.டி.ஜே.எஸ்.) தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிட்டார். அவர் 78 ஆயிரத்து 816 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இம்முறை வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். கேரள நாடாளுமன்றத் தொகுதிகளில், இந்த தொகுதியை முக்கிய தொகுதியாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சென்ற முறை ராகுல்காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்குக் காரணம் எதிர்த்து நின்ற வேட்பாளர்கள் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர்கள் எனக் கூறப்படுகிறது.
தொஅர்ந்து காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்று வயநாடு தனது கோட்டை என நிரூபித்து உள்ளது. எனவே மீண்டும் வெற்றி பெறத் தீவிர முனைப்பு காட்டுகிறது. அதே வேளையில் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்று உள்ளது என்றாலு, கேரளாவில் எதிர்த்து போட்டியிடுகின்றன.
ராகுல்காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். ஆனி ராஜா தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பிருந்தே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தாலும் ராகுல் காந்தியே முன்னணியில் உள்ளார்.
தற்போது ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதன் மூலம் தேசிய அரசியலில் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும். இந்தத் தொகுதி நாடே எதிர்பார்க்கும் தொகுதியாக மாறிவிட்டது. என்பது குறிப்பிடத்தக்கதாகும்,