டில்லி:
உடல்நலம் இல்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
அவர் விரைவில் உடல்நலம் குணமடைய சமுக வலைதளமான ட்விட்டரில் வாழ்த்து சொல்லியிருக்கிறார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி.
ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைய வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.