கொச்சி:
வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி ஏப்ரல் 4ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உ.பி. மாநிலம் அமேதியில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், 2வது தொகுதியாக தற்போது கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வயநாட்டில் போட்டியிடுவது ஏன் என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த ராகுல் காந்தி, தென் மாநிலங்களை மோடி அரசு புறக்கணித்துவிட்டதாகவும், தங்களை கவனிக்க யாரும் இல்லை என்பதே தென்னிந்திய மக்களின் கவலை. அதனால், தென் இந்திய மக்களுடன் நாங்கள் உள்ளோம் என்பதற்காகவே போட்டியிடுவதாக தெரிவித்தார்.
கேரளாவில் தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது., வரும் 4-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். அன்றைய தினம், ராகுல் காந்திவேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக கேரள மாநிலகாங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.
அன்றைய தினம் கேரளா வரும் ராகுல்காந்தி மிகப்பெரிய வரவேற்பு கொடுக்க வயநாடு உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே ராகுலின் கேரள வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான பணிகளை சிறப்பு பாதுகாப்பு படை இன்று முதல் செய்ய தொடங்கி உள்ளது.