18ந்தேதி கர்நாடகத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம்

பெங்களூரு: 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கர்நாடக மாநிலத்தில் நாளை மறுதினம் (18ந்தேதி) அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை  தொடங்குகிறார்.

ஏற்கனவே தமிழகத்தில் கடந்த 13ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ராகுல், தற்போது வட மாநிலங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்,  18ந்தேதி கர்நாடகத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

நாளை மறுதினம் தனி விமானம் மூலம் கர்நாடக வரும் ராகுல்காந்தி, முன்பகல் கலபுர்க்கியில் நடைபெறும் காங்கிரஸ் ஊழியர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார். பின்னர் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

அதைத்தொடர்ந்து   அன்று மாலை பெங்களூருவில் இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

இதை கர்நாடக காங்கிரஸ் அறிவித்து உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: election campaign, Karnataka on 18th march, Loksabah election2019, rahul gandhi
-=-