டில்லி

மோடியால் புகழப்பட்ட நாகாலந்துஅமைது சாதனம் என்ன ஆயிற்று என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த 2015 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நாகாலாந்து அமைதி சாசனத்தில் பாரதப் பிரதமர் மோடியும் நாகாலாந்து சோசலிச அமைப்பின் தலைவர் ஐசக் முயிவாவும் கையெழுத்திட்டனர்.   அதன் மூலம் நாகாலாந்துப் பகுதியின் பயங்கர வாத நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மோடி அறிவித்தார்.   ஆனால் இன்று வரை அந்த சாசனத்துக்காக எந்த ஒரு திட்டமும் தீட்டப்படவில்லை.

வரி, 27ஆம் தேதி அன்று நாகாலாந்து சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன.   நாகாலாந்து அமைதி சாசனம்  குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் நாகாலாந்தின் மாநிலக் கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.    காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகுல் காந்தி மட்டுமே மோடிக்கு மாற்றானவர் என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”கடந்த 2015ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் மோடி நாகாலாந்து அமைதி சாசனத்தில் கையெழுத்து இட்டதால் ஒரு சரித்திர சாதனை படைத்ததாக கூறிக் கொண்டார்.   இப்போது 2018ஆம் வருடம் பிப்ரவரி ஆகிறது.   அந்த அமைதி சாசனம் என்ன ஆயிற்று என்பதை மோடி விளக்குவாரா?   அர்த்தமில்லாத வார்த்தகளை பேசும் முதல் இந்தியப் பிரதமர் மோடி தான்”  என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.