ராகுல்காந்தி வயநாட்டில் போட்டி: காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Must read

டில்லி:

கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் போட்டியிடுவதை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

காங்கிரஸ் கட்சி  வெளியிட்டுள்ள  வேட்பாளர் பட்டியலில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரில் ராகுல்காந்தியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

உ.பி. மாநிலம் அமேதியில் ராகுல்காந்தி போட்டியிடும் நிலையில், மற்றொரு தொகுதியாக, கேரள  மாநிலம் வயநாட்டிலும் போட்டியிடுவார் என தகவல் பரவியது.

அதை மெய்ப்பிக்கும் வகையில் நேற்று  தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசும்போது கூறிய ராகுல், பாஜக அரசு தென் மாநிலங்களை புறக்கணித்து விட்டதாக அங்குள்ள மக்கள் வருந்தம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பதை காட்டவே, கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடுவதாக கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் ராகுல்காந்தியின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர் நாளை கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article