வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டு மனமுடைந்தேன். புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
தங்களின் உடைமைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ள ராகுல் காந்தி நிவாரண உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.