சென்னை,
இந்தியாவில் மதசார்பற்ற ஆட்சியை ராகுல்காந்தியால் மட்டுமே தர முடியும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தஞ்சை மாவட்ட த.மா.கா. நிர்வாகிகள் பலர் திருநாவுக்கரசர் முன்னிலையில் மீண்டும் காங்கிரசில் இணைந்தனர். அவர்களை கட்சியில் இணைத்துக்கொண்டு திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
காங்கிரசில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரால் மட்டுமே மதசார்பற்ற ஆட்சியை ராகுல்காந்தியால் மட்டுமே ஏற்படுத்தி முடியும் என்று இளைஞர்கள் நம்புகிறார்கள் என்று கூறினார்.
மேலும், ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி வலுப்பெறும், வளம்பெறும். இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.