லோடா பஜார், சத்தீஸ்கர்

த்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றி உள்ளார்.

 

கடந்த 7 ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  இன்று மாலையுடன் சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது

இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பலோடா பஜார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டுள்ளார்,  அவர் தனது உரையில் பிரதமர் மோடியைக் கடுமையாகத் தாக்கிப் பேசி உள்ளார்.

ராகுல் காந்தி,

”பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னைத் துஷ்பிரயோகம் செய்கிறார். ஆனால் நான் அதைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. மோடியின் உத்தரவாதம் என்றால் அது அதானியின் உத்தரவாதம்தான்.

நான் எனது குறிக்கோளை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மோடி, அதானிக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறாரோ அதே அளவு பணத்தை நான் ஏழை மக்களுக்குக் கொடுப்பேன். நீங்கள் ஒரு ரூபாய் அதானிக்குக் கொடுத்தால் அந்த ஒரு ரூபாயை நான் ஏழைகளுக்குக் கொடுப்பேன்.

காங்கிரஸ் அரசு, அது ஆளும் மாநிலங்களில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்கின்றது,அதே நேரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அதானி போன்ற பெரிய தொழிலதிபர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்கிறது.

சத்தீஸ்கரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு வரலாற்று முடிவை எடுத்துள்ளது. எல்கேஜி முதல் பிஜி வரை இலவச கல்வி வழங்க முடிவு செய்துள்ளது”

என்று பேசி உள்ளார்.