ம்மு

ம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பேருந்து விபத்தில் 36 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம், கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்முவிற்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. தோடா என்ற பகுதியில் இந்த பேருந்து சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 36 பேர் உயிரிழந்து 19 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்க் மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு விபத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.