சென்னை: திமுக கூட்டணி சார்பில் வரும் 28-ம் தேதி சேலத்தில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான 13 கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட தோழமை கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
சேலம் மாட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 தொகுதிகளில் திமுக போட்டியிடும் நிலையில், ஓமலூர் தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஓமலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மறைந்த முன்னாள் மத்தியஅமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மோகன் குமாரமங்கலம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், வரும் 28ந்தேதி சேலம் மாவட்டம், சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை, சீலநாயக்கன்பட்டியில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தோழமைக்கட்சித் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன். முஸ்லிம் லிக் கட்சித்தலைவர் காதர்மொகிதீன், விசிக தலைவர் திருமா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேலமுருகன், கொங்கு மக்கள் கட்சி ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பி.வி.கதிரவன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் இரா.அதியமான், கிறிஸ்தவ நல்லென்ன இயக்கம் தலைவர் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலைக் கட்சி தலைவர் முருகவேல்ராஜன் மற்றும் திராவிடர் கழகத் தலவர் கி.வீரமணியும் கலந்துகொள்கின்றனர்.
dffdgdfgdfமன்மகம்னளக்மங்மங்மக்னள