லக்னோ: ராகுல் காந்தி ஒரு போர்வீரன், அரசின் பலத்திற்கு பயப்படுவதில்லை என உ.பி.யில் ராகுல்காந்தியுடன் பாதயாத்திரையில் மீண்டும் இணைந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா தெரிவித்தார்.
ராகுலின் பாரத்ஜோடோ யாத்திரை இன்று காலை டெல்லியில் தொடங்கிய நிலையில், பிற்பகல் உ.பி. மாநிலம் காஜியாபாத்தில் நுழைந்துள்ளது. அங்குள்ள லோனி எல்லையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் ராகுலுக்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா, கன்னியாகுமரியில் இருந்து 3,000 கி.மீ தூரம் கடந்து உத்தரப்பிரதேசத்தில் நுழைந்த ராகுல் காந்தியின் யாத்திரையை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
ராகுல் காந்தியின் இமேஜை அழிக்க அரசாங்கம் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்தது. ஆனால், அவர் உண்மையின் பாதையில் இருந்து பின்வாங்கவில்லை. அவர் ஒரு போர்வீரன் என்பதால் அவர் எதற்கும் பயப்படவில்லை. “அதானி, அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்கள் பல அரசியல்வாதிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களை விலைக்கு வாங்கியிருக்கலாம், ஆனால் என் சகோதரரை ஒருபோதும் வாங்க முடியாது”, ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது. ராகுல் காந்தி குளிர்காலத்தில் கூட குளிர்ச்சியாக இருப்பதில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். இதற்குக் காரணம் அவர் உண்மை யின் கவசம் அணிந்துள்ளார் என்பதுதான். என் மூத்த சகோதரனைப் பாருங்கள். நான், அவரைப்பற்றி அதிகளவில் பெருமைப்படுகிறேன்.
உத்தரபிரதேசத்தில் உள்ள அனைவரும் இந்த ‘மொஹபத் கி துகானின்’ (அன்பை பரப்புவதற்கான கடை) உரிமையைத் திறக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
உ.பி.யில் ராகுல் யாத்திரையில், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா இணைந்து சிறிது தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.
உ.பி.யில் ராகுல் பாத யாத்திரையில் இணைந்த பரூக் அப்துல்லா, பிரியங்கா காந்தி…