அகத்தீஸ்வரம்:
அகத்தீஸ்வரத்தில் இருந்து ராகுல் இந்து 2வது நாள் பாத யாத்திரை துவங்கியது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும், 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார்.
இதன் தொடக்க விழா நேற்று மாலை கன்னியாகுமரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காதியிலான தேசிய கொடியை ராகுலிடம் வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இன்று அகத்தீஸ்வரத்தில் இருந்து ராகுல் 2வது நாள் பாத யாத்திரை துவங்கியது.
Patrikai.com official YouTube Channel