பாட்னா

ரும் 23ஆம் தேதி அன்று பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மு க ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிடோர் பங்கேற்கிறார்கள்.

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அடுத்த மக்களவை தேர்தலில் பாஜக.,வுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அடுத்த கட்டமாக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தைப் பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 12-ம் தேதி நடத்த ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார்.

இதுபோன்ற கூட்டங்களுக்கு பிரதிநிதிகளை அனுப்பாமல் கட்சி தலைவர்களே பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ் குமார் சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார்  எனவே இதற்கான தேதியைத் தள்ளிவைக்கும்படி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட சில கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன.

நேற்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி ,

”பாட்னாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் 23-ம் தேதி நடைபெறுகிறது.  கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மற்றும் மல்லிகார்ஜூன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.”

எனக் கூறி உள்ளார்.