கொல்லம்:
9வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி துவக்கினார்.

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்தையை கடந்த 7-ஆம் தேதி  கன்னியாகுமரி மாவட்டம், முழகுமூடு பகுதியில் இருந்து தொடங்கினார்.

கேரளாவில் மழையும் பெய்துகொண்டிருப்பதால், நடைபயணம் மேற்கொள்பவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். மேலும், தொடர் நடை பயணத்தால் ராகுல் காந்தியின் காலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தான் தொடர்ந்து நடைபயணம் செல்வேன் என ராகுல் கூறியிருந்தார்.

ஆனால், சீதோஷ்ண நிலமை மற்றும் உடல்நிலையை கருத்தில்கொண்டு, நேற்று ஒரு நாள் பாதயாத்திரை குழுவினருக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ராகுல் காந்தி, காலை 9-வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து கருநாகப்பள்ளி நோக்கி  தொடங்கினார்.