நெமம்:
ராகுல் காந்தி, கேரளாவில் 6வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கினார். களியக்காவிளை அருகே உள்ள தலச்சன்விளையில், கடந்த சனிக்கிழமை தமிழக பயணத்தை நிறைவு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் 4 நாட்களில் 56 கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார்.
இன்று காலை 7 மணிக்கு நெமம் முதல் பட்டோம் வரையிலும் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல், மாலையில் பட்டோம் முதல் கலக்கோட்டம் வரை யாத்திரை மேற்கொள்கிறார். அவர் கேரள மாநிலத்தில் 19 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel