கிரகப் பெயர்ச்சிகளைப் பொருத்த வரையில் நான்கு பெயர்ச்சிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
குரு பெயர்ச்சி.. சனி பெயர்ச்சி, ராகு/ கேது பெயர்ச்சிகள் இவை விதியை ஒரே நாளில் திசை திருப்பக் கூடியவை. மற்ற கிரகங்கள் பெயர்ச்சி யடையும் போது அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்பவை. ஆனால் ராகுவும் கேதுவும் முந்தைய கட்டத்துக்கு நகர்பவை. அதாவது பின்நோக்கிய பயணம்.
ராகுவும் கேதுவும் எப்போதுமே நேர் எதிராக இருப்பவர்கள். அதாவது எந்த ஜாதகத்தை எடுத்துக்கொண்டா லும் அதில் நேர் எதிர் கட்டத்தில்தான் அமர்ந்திருப்பார்கள். ஆகவே ராகுப்பெயர்ச்சி நிகழும்போது தன்னிச்சை யாகக் கேதுப்பெயர்ச்சியும் நடைபெறும்.
சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் 13ம் தேதி ராகு மற்றும் கேதுப் பெயர்ச்சி நிகழ்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசிக்கு வந்தால் சரியாகப் பதினெட்டு மாதங்கள் அங்கு தங்கிப் பலன்களை அளிப்பார்கள். பலன்கள் இதோ….
தனுசு
இந்தத் தன்னம்பிக்கை இருக்கு பாருங்க தன்னம்பிக்கை. அது மட்டும் தளராம பார்த்துக்குங்க. மற்றவர்கள் மட்டு மில்லாம நீங்களே உங்க திறமை பற்றி சந்தேகப்பட்டுத் தாழ்த்திக்கொள்ள வாய்ப்பிருப்பதால் அந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருங்கள். அப்போதுதான் நீங்கள் விரும்பியதைச் சாதிக்க லாம். தன்னம்பிக்கைதான் முன்னேற்றத்துக்கு வழி. சரும நோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அல்லது ஒரு வேளை சிறிய அளவில் பிரச்சனைகள் வந்தால் உடனே சரும நிபுணரிடம் ஓடிப்போய் அது பெரிதாகா மல் சிகிச்சை எடுக்கணும். ஓகேயா?
கணவன் மனைவி என்றால் சின்னச் சின்னப் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். உடனே அதைப் பெரிதாகக் கருதி இரு தரப்புப் பெற்றோரிடமும் ஓடிப் போய் மத்யஸ்த்தம் செய்யச் சொல்லிக் கேட்க வேண்டாம். இன்ஃபாக்ட் வெளி மனிதர்கள் யாரையுமே உங்களுக்கிடையே உள்ளே அனுமதிக்காதீங்க. மற்றபடி இருவரில் ஒருவர் அல்லது இருவருமே வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. சிறு வகையில் பிரிவு உள்ளது. அது நல்ல முறையில் இருக்குமாறு பார்த்துக்குங்க. அதாவது படிப்பு உத்யோகம் என்ற வகையில் மட்டுமே வேறு வழியின்றி ஒருவரை ஒருவர் பிரிந்தால் அதுமட்டும்தான் ஓகே.
நவம்பருக்குப் பிறகு உங்களின் அருமையான பொன்வேளை துவங்குது. இழந்திருந்த தன்னம்பிக்கையெல்லாம் ஒன்றுக்குப் பத்தாகத் திரும்பக் கிடைக்கும். விட்டுப்போயிருந்த பிரார்த்தனைகள் நிறைவேறுவதால் இனி தன்னை அசைக்க ஆளில்லை என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் எற்படும். இறைவழிபாடுகளில் நம்பிக்கை பிறக்கும். இது வரை மனசில் இருந்து வந்த தீய சிந்தைகள் அகலும். நல்ல எண்ணங்கள் அவ்விடத்தை நிரப்பும்.
2020 ன் இரண்டாவது பாதியில்
பேச்சினால் நன்மைகள் ஏற்படும். உத்யோகத்தில் உறுதியான நிரந்தரத்தன் மையை எட்டுவீங்க.
மகரம்
கடந்த ஒன்றரை வருடங்களாக உருப்படியான முன்னேற்றம் என்று எதுவும் இல்லை என்று மனசுக்குள் ரகசியமாகவேனும் ஒரு சஞ்சலம் இருந்து உங்களை ஆட்டுவித்துக்கொண்டி ருந்தது. பெயரும் புகழும் முன்பு கிட்டின என்றாலும் அதெல் லாம் உங்களின் எதிர்பார்ப்பில் பத்தில் ஒரு பங்குகூட இல்லை. ஆனால் இனி பாருங்களேன். உங்களின் வெற்றியை உங்களாலேயே கற்பனை செய்து பார்க்க முடியாது. உங்க எதிர்பார்ப்பைப்போல் பத்து மடங்கு இருக்கும். ஆனால் அதற்காக என்னமாய் ஓடி உழைப்பீங்க தெரியுமா?சோம்பலைக் கொஞ்சம் தள்ளி வைச்சுட்டு உழைக்க ஆரம்பிச்சுடுவீங்க. வெற்றிதான்.
இத்தனை காலம் நண்பர்கள் என்ற பெயரில் இருந்து வந்த எதிரிகள் பின் னால் திரும்பிப்பார்க்க நேரம் இல்லாமல் ஓடி ஒளிவாங்க. நீங்க அவங் களை இனம் கண்டுகொள்வீர்கள் என்பதுதான் முதல் காரணம். தீய நட்பு எது, நல்ல நட்பு எதுன்னு இனம் கண்டுக்க வேண்டியது உங்க பொறுப்புங்க. மாணவர்கள் ஜமாய்ப்பீங்க. பிசினஸ் செய்பவர்கள் பெரிய லாபம் காணுவீங்க.
நவம்பருக்குப் பிறகு
போரடிக்குதுன்னு கடமைகளை ஒத்திப்போட்டுடாதீங்க. வீண் பழி வராதபடி பாத்துக்கிட்டா போதும். உங்களை வெல்ல ஆளில்லை. எந்த வம்பு வழக்கிலும் உங்க நீளமான மூக்கை நுழைக்காதீங்க. உங்க கடமைகளை யாரையும் நம்பி ஒப்படைக்காதீங்க. மற்றவர்கள் பொறுப்பை தேவையில்லாம வலிய ஏத்துக்கிட்டுத் திண்டாட வேண்டாம். பொறுப்பாய்க் கடமையைச் செய்ங்க. வெற்றிதான்.
2020 ன் இரண்டாவது பாதியில்
ஏகப்பட்ட அலைச்சல். அத்தனையும் வெற்றிகரமான ரிசல்ட்டைக்கொடுக்கும். வெளியூர் வெளிநாடு என்று பயணம்ம செய்து சாதனை செய்வீங்க. கலைஞர் களுக்கு இது இரட்டிப்புப் பொற்காலம் என்றுதான் சொல்லணும்.
கும்பம்
எதிலும் நிதானப் போக்கு இருந்தாலும் முதல் ஓரிரண்டு மாசங்களுக்கு படபடவென்று வெற்றிகளும் லாபமும் அதிகரிக்கும். அதை நம்பி அகலக்கால் வெச்சுடாதீங்கப்பா. அதற்குப்பிறகு நிறைய உழைச்சு அதற்கேற்ற லாபம் .. வருமானம் கிடைக்கும். எனவே ஆரம்பத்தில் கிடைச்ச குருட்டு அதிருஷ் டத்தை நம்பாதீங்க. ஆனால் ஒன்று நிச்சயங்க… உழைப்புக்கு ஏற்ற லாபம் கட்டாயமாய்க் கிடைக்கும். அது ஏமாற்றாது. குறையாது.
வெளிநாட்டிலிருந்து லாபமும் நன்மையும் பிரமாதமாக வரும். சிறிய முயற்சி கள் பெரிய நன்மைகளை அளிக்கும்.. வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங் களில் மட்டும். குழந்தைகள் பற்றி சில டென்ஷன்கள் தலை தூக்கினாலும் அவை நிரந்தரமாக இருக்காது என்பதோடு அவை உங்கள் கற்பனையாகவோ யாரோ கிளப்பிவிட்ட புரளியாகவோ இருக்கவும் வாய்ப்பிருக்கும். குழந்தை கள் வெளிநாடு வெளியூர் போய் வெற்றிக்கொடி நாட்டி வருவாங்க.
நவம்பருக்குப் பிறகு
பிரமாதமான நன்மைகள் உண்டாகும். என்றைக்கோ போட்டு வைத்த பண மெல்லாம் எதிர்பாராத அளவு பல்கிப்பெருகி வந்து சேரும். எதிர்பார்த்த லாபங்கள் கொஞ்சமும் குறையாது. உழைத்ததைவிட அதிக லாபம் வரும். எனினும்
2020 ன் இரண்டாவது பாதியில்
இனி வாழ்வில் ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வைக்க ணுங்க. எந்த வம்பு வழக்கிலும் மாட்டிக்காதபடி வாயைமூடிக்கிட்டு உங்க வேலையை மட்டும் கவனிக்கணும். அதிக உழைப்பு வேணும். அலுவலகத்தில் கடமைகளைக் குறைவின்றி செய்யணும். யாரைப் பற்றியும் யாரிடமும் விமர்சனங்கள் வேண்டாம். குறிப்பா மேலதிகாரிங்க பற்றியும் அரசியல் தலைகள் பற்றியும் உங்களுக்கு எதுக்கு வம்பு? கமென்ட்ஸ் எதுவும் செய்யாதீங்க.
மீனம்
வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அல்லது தற்போது உள்ள வேலையில் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் போய் உங்கள் திறமையை நிரூபிப்பீங்க. உங்களுக்கு மிக வேண்டியவர்களைப் பார்ப்பதற்காக வெளியூர், வெளிநாடு என்று போக வேண்டியிருக்கும். பர்சனல் காரணங்களுக் காகவும் குடும்பக் காரணங்களுக்காகவும் கோவில் குளம் என்று பயணங்கள் போவீங்க.
அம்மாவின் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டியிருக்குங்க. அம்மா நல்லபடியா இருந்தா அவங்களோட சண்டை சச்சரவுகள் மனஸ்தாபம் என்று வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே பணிஞ்சு போங்க. அவங்க சொல்லும் எல்லாமே உங்க நன்மைக்குத்தான்னு எப்பதான் புரிஞ்சுப்பீங்க? வாகனங்கள் டென்ஷன் படுத்தாதபடி அவற்றைப் பராமரிங்க. மாணவர்கள் கெட்ட பெயர் வராமல் கவனமாய்ப் பார்த்துக்குங்க. நல்லா உழைத்தால்தான் மார்க் எடுக்கலாம்.
நவம்பருக்குப் பிறகு
உத்யோகத்தில் சில்லறைப் பிரச்சினை வராமல் இருப்பதற்கு குரு பகவானை வழிபடுவதுடன் அலுவலகத்தில் உங்களின் குருவாக உள்ளவர்களை உண்மை யாக மதித்துச் செயல்படுங்க. கற்றுக்கொள்ளுங்க. சின்சியரா உழைங்க. அலுவலகத்துக்கு துரோகம் செய்யாதீங்க
2020 ன் இரண்டாவது பாதியில்
லாபங்களும் வருமானமும் சற்று நிதானமாக வரும் என்றாலும் நல்லவேளை யாக உங்கள் எதிர்பார்ப்புக் குறைவாக இருக்கும் என்பதால் அதிக ஏமாற்றம் இருக்காது. வாகனங்களால் செலவுகளும் சிரமமும் டென்ஷனும் ஏற்படும் என்பதால் மனதையும் தயார்நிலையில் வைத்துக் கொண்டு வாகனங்களை யும் பர்ஃபக்ட் கண்டிஷனில் வைத்துக் கொண்டால் சிரமமே இல்லாமல் சமாளிப்பீங்க. ஜமாய்ப்பீங்க என்பதில் எந்த சந்தேகமும் கிடையாதுங்க.
முடிவுபெற்றது.