வார ராசிபலன் 15.02.2019  முதல் 21.02.2019 வரை:  வேதா கோபாலன்

Must read

மேஷம்       

மனசில் சமீபத்தில் காணாமல் போயிருந்த தைரியமும் தன்னம்பிக்கையும் மறுபடியும்  துளிர்த்து முளைக்கும்.  உங்களுடைய வருமானம் வானளாவ உயரப்போகுது. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல? 4 வகை இன்கம்! காதல் சிறகை விரித்து ஒன்பதாம் மேகத்தின் மேல் டூயட் பாடுவீங்க. திருமணம் ஆனவர்களும் ஹனி மூன் முடிச்சவங்களும் அடுத்த ஹனி மூனுக்குத் தயாராயிடுவீங்க. வேலையை விடலாம்னு நினைக்கவே நினைக்காதீங்க. கொஞ்சம் பின்னால் திரும்பிப் பாருங்க. நீங்க வெளியே வந்தால் உள்ளே முண்டியடிச்சு நுழைய நூறு பேர் காத்திருக்காங்க. விமானத்தில் பறக்கப்போறீங்க. கார் வாங்கப் போறீங்க. எதிர்பாராத மகிழ்ச்சியான விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கப் போகுதுங்க. செலவு பாட்டுக்கு சுனாமி கணக்கா உங்களை விழுங்கிகிட்டிருந்தாலும் அதற்கெல்லாம் அசந்து போறவங்களா நீங்க!

ரிஷபம்

கோபத்தில் சாபம் விட  ஆரம்பிக்காதீங்க. பேசுவதற்கு வாயைத் திறக்குமுன் ரெண்டு முறை யோசிச்சுக்குங்க. சாப்பிட மட்டும்தான் வாயைத் திறக்கலாம். அதைக்கூட வழக்கத்தைவிடப் பாதி அளவுதான் செய்யலாம். வார்த்தை கீர்த்தை நழுவி ஓடிப் போச்சோ…எடுத்து பாக்கெட்லயா போட்டுக்க முடியும்? சைலன்ட் மோட்ல இருந்துடுங்க. உங்க காதலர் அல்லது கணவர் (அல்லது காதலி அல்லது மனைவி) நிறைய நன்மைகள் அடையப் போகிறார். பார்த்துப் பெருமிதப் படப்போறீங்க. என்னது? வேலை பிடிக்காமல் கம்பெனியில் பேப்பர் போடப்போறீங்களா? இப்பவா? நோ…நோ. இன்னும் கொஞ்சம் பொறுமை.  வியாபாரிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். ஆகவே சற்று சோம்பலைப் பொருட்படுத்தாமல் அலைந்து திரிந்து பிசினஸ்ஸை கவனிங்க. ப்ளீஸ்,

மிதுனம்

குழந்தை உங்களை சந்தோஷப்படுத்தப்போறாங்க. வழிபடும் இடங்களுக்குப் போவீங்க. அந்த இடத்தில் உங்க வாழ்க்கையைத் திசை திருப்பும் நன்மை ஒன்று நடக்கப் போகுது. யாரையேனும் சந்திக்கக்கூடும். அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். இது வரை சந்திக்காத புதிய முகமாக அவர் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. அவர்/அவங்க எதிர்பாலினத்தினராக இருக்க வாய்ப்பு அதிகம் அரசியலில் இருப்பர்கள் இது கனவா நிஜமா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ளும்படியான வெற்றிகளை அடையப் போறீங்க. மற்றவர்கள் வீட்டு விருந்துகளிலேயே கலந்து கொண்டு பழக்கப்பட்டிருந்த நீங்க மற்றவர்களுக்கு விருந்து வைப்பீங்க. குடும்பத்தில் ஹாப்பி ஹாப்பி நிகழ்ச்சிகள் நடைபெறும். விலகிய உறவினர் மறுபடியும் சேர்ந்துப்பாங்க. சருமம் பற்றிய ஆரோக்யத்தில் அதிக கவனத்துடன் இருங்க.

கடகம்

நண்பர்கள் ஒரு பெரிய நன்மைக்குக் காரணமாய் இருப்பாங்க. மம்மியால் உங்களுக்கும் உங்களால் டாடிக்கும் நன்மைகள் ஏற்படும். ஆக மொத்தத்தில் குடும்ப ஒற்றுமை கூடும்.  வீட்டில் ரோஜா மாலை கற்கண்டு சந்தனம் மஞ்சள் விருந்துன்னு ஏகமாய் சந்தோஷம் வரப்போகுது. இன்னொரு பக்கம் அலுவலகத்தில் பதவு உயர்வு சம்பள உயர்வு பொறுப்பு உயர்வு கவுரவம்னு மகிழ்ச்சி அலை அடிக்கப்போகுது. எது நடந்தாலும் நன்மைக்குத்தான். சும்மா சமாதானத்துக்குச் சொல்றேன்னு நினைக்கறீங்களா? இப்ப இப்படி ஆகிப்போச் சேன்னு நினைக்காதீங்க. இதன் விளைவு பற்றி பிற்காலத்தில் பெரிய அளவில் சந்தோஷப் படப்போறீங்களே. எத்தனை நாளாப் படுத்திக்கிட்டிருந்த பிரச்சனை ஒன்று உங்களைவிட்டு நிரந்தரமாய் டாட்டா சொல்லப்போகுது. வெகு காலத்திற்குப் பிறகு நிம்மதிக்கு ஸ்பெல்லிங் கண்டுபிடிப்பீங்க.

சிம்மம்

சுண்டுவிரல் வலிக்கெல்லாம் கவலைப்பட உங்களுக்கு ஏது நேரம்? நல்ல வேளையாய்ப் பிரச்சினையும் சின்னதாய்த்தான் வரும்.. அதைத் தூக்கிச்சாப்பிடும் அளவு நன்மைகளும் ஏராளமாய் வரும் நிறையப் பாராட்டுக் கிடைக்கப்போகுது.  மேடையில் உட்கார வைச்சுப் புகழுவங்க. பொறுப்பை உணர்ந்து செயல்படுங்க. கடமையை சரிவர செய்தாகணும்… தட்டிக் கழிக்கப் பார்க்காதீங்க. பெற்றோர்களுக்குப் பெரிய பொறுப்பு ஒண்ணு முடியும். ஹப்பாடா! அனேகமா அது உங்க கல்யாணமாய் இருக்கக்கூடும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நிறையப்புதிய பொறுப்புக்கள் வந்து அதனால பர்ஸ், பீரோ, பாஸ்புக் எல்லாம் நிறையும். அலுவலகத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையா அடி எடுத்து  வைக்கறது நல்லது

கன்னி

கட்டுப்படாமல் இருந்த செலவுகள் எல்லாம் நல்ல முறையில் கட்டுக்கடங்கி இது போல் பேங்க் பேலன்ஸை நீங்க கண்ணால பார்த்து ரொம்ப காலம் ஆச்சுன்னு முகம் மலர்வீங்க. வேறு அலுவலகத்திற்க மாற இத்தனை காலம் தடையும் தாமதமுமாய் வந்துகிட்டு இருந்தது. இப்பதான் வேளை வந்திருக்கு. கரிக்குலம் விட்டே ரெடியா- விட்டேற்றியா இருந்துடாதீங்க. கம் ஆன்.  திருமணத்திற்காகக் காத்திருப்பவர்கள், குழந்தைக்காக ஏங்குபவர்கள், உத்யோகத்தில் தேய்ந்து கொண்டு மாற்றம் எதிர்பார்ப்பவர்கள், வீட்டை ஆரம்பித்துவிட்டு விழி பிதுங்கிக் கொண்டிருப்பவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்திகள் உண்டு. உங்களுடைய கவர்ச்சி அம்சம் முழு வீச்சில இருக்கும். வருவாரும் போவாருமாய் வீடு அமர்க்களப்படும். உங்களுக்கு இந்த விசேஷம் அந்த சுப நிகழ்ச்சின்னு சரியாய் இருக்கும்.

துலாம்

நமக்கெங்கே இதெல்லாம் கிடைக்கப்போகுது என்று நீங்கள் ஒரு காலத்தில் ஏங்கிய விஷய மெல்லாம் இப்போது உங்க முன்னால் சகஜமாய்  வந்து உட்காரும். குழந்தைகளால் பெருமிதம் அனுபவிப்பீங்க. இந்த அளவு அவங்க சாதிப்பாங்கன்ன நீங்க நினைச்சதில்லை! காதல் விஷயத்தில் அவசரம் வேண்டாம். சில விஷயங்களில்  தடை தாமதம் ஏற்படுவது கூட நல்லதுதான்னு உங்களுக்குத் தெரியாதா என்ன! உங்க டாடிக்கு ஏதோ நன்மை காத்துக் கிட்டிருக்கு. குடும்பத்தில் மகிழ்ச்சி தேவதை நடு ஹாலில் சோஃபா போட்டு உட்காரப் போறா.   ஆரோக்யமா ஃபைன், நிதி நிலையா திருப்திகரம், குடும்ப மகிழ்ச்சியா சூப்பர்னு உங்க லிஸ்ட்டில் உள்ள எல்லா அயிட்டமும் பச்சை ஸ்கெட்ச் பேனாவால டிக் வாங்கும்.

விருச்சிகம்

சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்ஞ்ஞ்ஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்துட்டார் போதும்ப்பா. ஆரோக்யம் அற்புதமாய் இருக்கும். தம் அடிக்கவோ தண்ணி போடவோ நண்பர்கள் வற்புறுத்தினால் அவர்கள் நண்பர்கள் அல்ல எதிரிகள் என்பதை மனசுக்குள் சேவ் பண்ணி வெச்சுடுங்க. ஏற்கனவே உங்களுக்கே ஏதாச்சும் (ஆரோக்யத்தைக் கெடுக்கும்) கெட்ட பழக்கம் இருந்தால் அதைத் தள்ளி ஓரமா வெச்சுட்டு உருப்படற வழியைப் பாருங்க. ஆரோக்யம் கெடுவது ஒருபுறம் இருக்கட்டும். தேவையே இல்லாத வீண்பழிகளிலும் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஜாக்கிரதை சொல்லிப்புட்டேன். சிநேகிதிக்கு காதல் தூது போறதுக்கு முன்னால் 2,3,4,5 முறை நல்லா யோசிச்சுட்டு இறங்குங்க

சந்திராஷ்டமம்: 15.02.2019 முதல் 17.02.2019 வரை

தனுசு

கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் என்ற வரியை மட்டுமின்றி அந்தப் பாட்டு மொத்தத்தையும் மனப்பாடம் செய்துக்குங்க. கடிகாரத்திலும் காலண்டரிலும் ஒரு கண் வெச்சுக்கறது நல்லது. சொல்றதை சொல்லிட்டேன். அதுக்கு மேல உங்க இஷ்டம். உங்கள் குழந்தைகளுக்கு மேலும் மேலும் குட் நியூஸ் உண்டு. உங்க சந்தோஷத்துக்கு இதைவிட வேற என்ன காரணம் வேண்டும்! அவங்களுக்கு உங்களால் நன்மை ஏற்படுவது நமக்கெல்லாம் பழக்கப்பட்டுப்போன செய்தி. அவங்களுக்கு உங்களால் நன்மை ஏற்படப் போகுதுங்க. எனவே அவங்க என்றென்றும் நன்றியோட  இருப்பாங்க.  நீங்க மாணவரா, குட்.. உங்களுக் கும் படிப்பில் உற்சாகம் படிப்படியாக உயர்ந்து பாராட்டும் பரிசும் வாங்குவீங்க. அதே சமயம் நிறைய டைவர்ஷன்கள் இருக்கும். எதிலும் சிக்கிடாதீங்க. ப்ளீஸ்.. உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன் தம்பி/ தங்கச்சி.

சந்திராஷ்டமம்: 17.02.2019 முதல் 19.02.2019 வரை

மகரம்

இத பாருங்க….சிறு சிறு டென்ஷன்கள் இருக்கிறதே என்று கவலை வேண்டாம். முன்பிருந்தமாதிரி பெரிய பெரிய டென்ஷன்கள் இல்லையே என்று சந்தோஷப்படுங்கள். ஏன் தெரியுமா? அந்தக் கவலையெல்லாம் உங்க ஆரோக்யத்தை டச் பண்ணிப்பார்க்க ட்ரை பண்ணிடுங்க. அதுக்காகத்தான் சொன்னேன். கடன்கள் வாங்க இது உகந்த நேரம் அல்ல. ஒத்திப் போடுங்கள். செலவுகளை மட்டுப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் கடுமையான முயற்சி செய்ய வேண்டியிருக்கும். செய்யுங்களேன். ஒன்று நிச்சயம். இத்தனை காலம் பாடாய்ப்படுத்தி வந்த அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் கண்டிப்பா வெளியே வந்திருப்பீங்க. சமீபத்திய பெயர்ச்சியின் மகிமைங்க அது.

சந்திராஷ்டமம்: 19.02.2019 முதல் 21.02.2019 வரை

கும்பம்

நீங்க பிசினஸ் செய்பவரா? எனில் அயல்நாட்டு வியாபாரம் சூடுபிடிக்கும். வருமானமும் அதிகரிக்கும். மாணவரா? எனில்.. வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். அதற்கு உதவிப்பணமும் கிடைக்கும்.  ஆனால் இதற்கெல்லாம் நீங்க செய்யும் முயற்சிகள் எல்லாம் உங்க்ளைச் சலிப்படையச்செய்யாமல் பார்த்துக்குங்க. படித்து விட்டு வேலைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கப்பல், விமானம், ராணுவம், தீயணைப்புத் துறையில் வேலை கிடைக்கும். அதாவது அரசு உத்யோகங்கள் கிடைக்க வாய்ப்பு அதிகம். படிப்புக்கேற்ற வேலை இப்போதைக்குக் கிடைக்கலைன்னாலும், கிடைச்ச வேலையை ஒப்புக்குங்க. இதுவும் பிடிக்கும். கொஞ்ச காலத்தில் சூப்பர் வேலை கிடைக்கப்போகுது.

மீனம்

புதிய தொழில் முயற்சிகள் வேண்டாம். பேராசை படவேண்டாம். அகலக்கால் வைப்பது ஆபத்து.  நல்ல முயற்சிகள் கட்டாயம் நல்ல பலன் கொடுக்கும் வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலன் தரும். ஆனாதல் அதற்காக நிறைய முயற்சிகளும் அலைச்சலும் இருக்கும்.  அதனால் என்ன.. உழைப்புக்கும், முயற்சிக்கும், அலைச்சலுக்கும் ஏற்ற பலன் தான் இருக்கப்போகுதே. பிறகென்ன? அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். அதில் ஒரு சின்ன இக்கு இருக்கும். கூட்டிக்கழித்துப் பார்த்தால் மனசில் மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் குறைவிருக்காது. அவ்ளோதானேங்க நமக்கு வேண்டியது.  சூப்பரா ஜமாயுங்க.

More articles

Latest article