டெல்லி:

பணமதிப்பிழப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் பதிவியை ராஜினாமா செய்தார் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்,‘‘ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம்ராஜன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. இவரது ராஜினமாக தொடர்பாக ரிசர்வ் வங்கியில் இருந்து ஒருவர் எழுதிய கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது’’ என்றார்.

சிதம்பரம் மேலும் கூறுகையில்,‘‘ அந்த கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது என்பதை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தனேன். வெளிப்டையான அரசு என்றால் அந்த கடிதத்தை மத்திய அரசு வெளியிட்டிருக்க வேண்டும். அந்த கடிதத்ததில் பணமதிப்பிழப்பு அமல்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது’’ என்று தெரிவித்தார்.

அதோடு,‘‘ரகுராம் ராஜன் அந்த பதவியில் நீடிக்க முடியாத அளவுக்கு மத்திய அரசு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. அந்த கடிதம் பணமதிப்பிழப்பு எதிராக இருந்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தான் ரகுராமன் ராஜன் ராஜினாமா செய்தார்’’ என்று சிதம்பரம் குற்றம்சாட்டினார்.