ரகுராம் ராஜனுக்கு நோபல் பரிசு : அமெரிக்க நிறுவனம் கணிப்பு

வாஷிங்டன்

முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் கூறி உள்ளது.

முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மோடி அரசுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் பதவி விலகினார்.   இவர் ஒரு பெரும் பொருளாதார மேதை ஆவார்.  அமெரிக்க பங்குச்சந்தையில் 2008ல் பின்னடைவு ஏற்படும் என 2008ல் முன்கூட்டியே கணித்துள்ளார்.   அது அப்படியே நிகழ்ந்தது.   பல பொருளாதார புத்தகங்கள் எழுதி உள்ளார்.

சமீபத்தில் ஒரு அமெரிக்க ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெறத்தகுதியானவர்கள் பட்டியலில் ரகுராம் ராஜன் பெயர்  இருப்பதாக அறிவித்துள்ளது.  ஆனால் அவர் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்பதை தெரிவிக்கவில்லை.   அவருக்கு நோபல் பரிசு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளதால் முதல் இடத்தில் இருப்ப்பார் என நம்பப் படுகிறது.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வரும் திங்கட் கிழமை அறிவிக்கப்பட உள்ளது.
English Summary
Raghuram rajan may get Nobel prize