டில்லி

த்திய அரசையும் தேச விரோத அரசு என ஆர் எஸ் எஸ் அழைக்குமா என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

வருமான வரித்துறை இணையதளத்தில் ஒரு சில போர்டல்கள் அமைக்க இன்ஃபோசிஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டது.  அப்போது ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்ஃபோசிஸ் தலைமை அதிகாரியுடன் பேசினார்.  இந்த தகவலை ஆர் எஸ் எஸ் இந்தி வார இதழான பாஞ்சஜன்யாவில் இன்ஃபோசிஸ் தேச விரோதமாக நடப்பதாக விமர்சித்து இருந்தது.

அந்த இதழில் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு சில அன்னிய சக்திகளுடன் இணைந்து இந்தியப் பொருளாதாரத்தை வேண்டுமென்றே சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நேரடியாகக் குற்றம் சாட்டி இருந்தது.  இது நாடெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு ரகுராம் ராஜன்,  “மத்திய அரசு தனியார் நிறுவனங்களை மோதல் போக்குடன் அணுகுவது அவர்களது வர்த்தகத்தை பாதிக்கும் என ஒரு அச்சத்தை ஏற்படுத்தும். இதனால் பெரு நிறுவனங்கள் அரசுடன் மோதலில் ஈடுபடுவதற்கு அஞ்சுகின்றன.

ஒரு நேர்காணலில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மோகன்தாஸ் பாய் அரசும், இன்போசிஸ் நிறுவனமும் வருமான வரித்துறை இணைய தளத்தின் கோளாறுகளுக்குக் காரணம் எனச் சுட்டிக் காட்டியிருந்தார்.

இப் பிரச்சினை, இரு தரப்பிலும் இருக்கும் திறனுக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலான இடைவெளி காரணமாக எழுகிறது  இதற்காக  இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தேச விரோதி ஆர் எஸ் எஸ் என விமர்சித்தது தவறாகும்.

மத்திய அரசு கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஆரம்பக் கட்டத்தில் பல தவறுகள் செய்தன.  அதற்காக மத்திய அரசையும் ஆர் எஸ் எஸ் தேச விரோத அரசு என விமர்சிக்குமா?  மனிதர்கள் தவறு செய்வது இயல்பான ஒரு விவகாரம்.   இதற்காக அவர்களைத் தேச விரோதிகள் என விமர்சிப்பது மிகவும் தவறாகும்” என கூறி உள்ளார்.