சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்கு கட்டியுள்ள கோயிலை அன்னையர் தினமான நாளை (ஞாயிறு) திறக்க இருக்கிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சொந்தச் செலவில் ஏற்கெனவே ஸ்ரீ ராகவேந்திரருக்கு சென்னை அம்பத்தூரில் கோயில் கட்டியுள்ளார். தற்போது அந்த கோயிலுக்கு எதிராக தனது அம்மா கண்மணிக்கு கோயில் கட்டியுள்ளார்.
இந்த கோயிலில், அவருடைய அம்மா கண்மணியின் ஐந்து அடி உயர முழு உருவச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கோயில் அன்னையர் தினமான நாளை திறக்கப்பட உள்ளது. சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் இந்த சிலையை நாளை காலை 8 மணிக்கு திறந்து வைக்கிறார்.
இந்த கோவிலில் 13 அடி உயரம் உள்ள காயத்திரி தேவியின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. “கடவுளும், பெற்ற தாயும் ஒன்றுதான் என்று உலகுக்கு நிரூபிக்கும் கோவிலாக இது இருக்க வேண்டும் என்பதற்காக அந்த காயத்திரி தேவி சிலைக்கு கீழேயே தனது தாயின் சிலையையும் லாரன்ஸ் நிறுவி உள்ளேன்” என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார்