பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயினின் ரஃபேல் நாடல் மற்றும் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் ரபேல் நாடல், இத்தாலியின் ஜான்னிங் சின்னெரை எதிர்கொண்டார். இதில், 7-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் போட்டியை வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
அதேசமயம், அமெரிக்க ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், தனது காலிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா வீரர் டீகோவிடம் தோற்றுப்போனார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், செக் குடியரசு வீராங்கனை கிவிட்டோவா, ஜெர்மனியின் லாராவை, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.