புதுடெல்லி:

காஷ்மீர் பள்ளத்தாக்கு இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி செல்வது அச்சுறுத்தலாக உள்ளது என காஷ்மீர் முதல்வரின் முன்னாள் ஆலோசகர் அமிதாப் மாத்து கூறியுள்ளார்.


புல்வாமா தாக்குதல் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், உள்நாட்டு பதற்றம் அதிகமாகவே உள்ளது. பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இரு தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சொன்னாலும், தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் தீவிர நடவடிக்கை எடுக்கப் போவதில்லை.

தீவிரவாதம் நோக்கிச் செல்லும் காஷ்மீர் இளைஞர்களும், அதிருப்தியில் உள்ள காஷ்மீர் மக்களும்தான் நீண்ட கால ஆபத்தாக உள்ளது.
ஒவ்வொரு அரசும் குறுகிய நலத்துடனேயே செயல்படுகின்றனர்.

அப்போதைய முதல்வர் முப்தி முகமது சையதின் ஆலோசகராக இருந்தபோது, அவருடன் காரில் பயணித்திருக்கின்றேன். மக்களை சந்தித்திருக்கின்றேன். இவை எல்லாம் சில வருடங்களாக காணாமல் போய்விட்டன.

காஷ்மீர் மக்களின் இதயத்தையும் மனதையும் கவர வேண்டும். மனித உளவியலுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றார்.