டில்லி:

ராதாபுரம் தொகுதி தேர்தல் வெற்றி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் தபால் வாககுகளை எண்ண உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து, அதிமுக எம்எல்ஏ இன்பதுரை உச்சநீதி மன்றத்தில் அவசர மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், அவரது  அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி என் வி ரமணா மறுப்பு தெரிவித்து, வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்டு உள்ளார்.

ராதாபுரம் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில்,  வாக்குகளை எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.