சென்னை
தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி உள்ளார்.
அப்போது ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்புடைய ஏழு நபர்களுக்கும் ஒமிக்ரான் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது.. தவிர காங்கோ வில் இருந்து வந்த பெண் ஒருவருக்கும் எஸ். ஜீன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூரு ஆய்வகத்துக்கு இவர்களின், மாதிரிகளை அனுப்பப்பட்டுள்ளது. மாதிரிகளின் ஆய்வு அறிக்கை வந்தவுடன் உறுதியான தகவல் தெரியவரும். இருப்பினும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.