சென்னை,

மிழகம் முழுவதும் இன்று 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கவனித்து வரும் தேர்தல் அதிகாரிகள் தற்போது தலைமை செயலகத்தில்  அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவிக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் களத்தில் இறங்கி பணப்பட்டுவாடா செய்து வந்தனர்.

இதன் காரணமாக வந்த புகார்களை தொடர்ந்து தேர்தல் கமிஷனும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை முதலே அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர் வீடுகள், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், நடிகர் சரத்குமார், அதிமுக எம்பி.சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவனங்கள் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் இருந்தும் ரூ.2.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள  சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா  மற்ற தேர்தல் அதிகாரிகளுடன்  அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைமை செயலகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஆலோசனை முடிந்ததும், அவர்கள் கொடுக்கும் அறிக்கையை தொடர்ந்து தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? அல்லது அறிவித்தபடி ஏப்ரல் 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுமா என்பது தெரியவரும்…….