சென்னை
சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை முடிவடைகிறது.
சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுகவின் மருது கணேஷ், அதிமுகவின் மதுசூதனன், பாஜகவின் கரு. நாகராஜன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இது தவிர டி டி வி தினகரன் உட்பட சுயேச்சைகளும் போட்டியில் உள்ளனர்.
அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது குறித்து புகார்கள் எழுந்தன. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. கண்காணிப்புக் கேமரா மூலம் சோத்னை, வாகன சோதனை என பல்வகை சோதனையில் பல லட்சக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொகுதியில் அனுமதி பெறாத பல வாகனங்களுகும் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இது குறித்து தேர்தல் அதிகாரி பத்ரா அனைத்துக் கட்சியினரிடமும் ஆலோசனை நடத்தினார். பல்வேறு கட்சிகள் பணப் பட்டுவாடா குறித்து புகார் அளித்தன. ஆர் கே நகர் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது. எனவே அரசியல் கட்சிகள் இன்றும் நாளையும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.