சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என தேமுதிக துணைப்பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் அறிவித்து உள்ளார்.

கடந்த ஒரு வருடமாக காலியாக உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் திங்களன்று தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சி யினர் வேட்பாளர்களை தேர்வு செய்ய பரபரப்பாகவும், பம்பரமாகவும் சுழன்று வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று திருவண்ணாமலை வந்த தேமுதிக துணைப்பொதுச் செயலாளர் எல்.கே.சுதீசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று கூறினார். மேலும்,  இரட்டை இலை சின்னம் இருந்தாலும் அதிமுக டெபாசிட் கூட வாங்காது என்ற அவர் மத்திய பாஜக அரசு சொல்வதை கேட்டு தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கடந்த முறை அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது  அதிமுக சார்பாக  3 அணிகள், திமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என பலமுனை போட்டி ஏற்பட்டது.  அப்போது
தேமுதிக சார்பில் ப.மதிவாணன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.