ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மேலும் 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

Must read

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி  இடைத்தேர்தலுக்கு ஏற்கனவே 3 தேர்தல் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம்  நியமித்திருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 2 பார்வை யாளர்களை நியமித்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் பிரகாஷை பொது பார்வையாளராக வும், ஐஆர்எஸ் அதிகாரி அபர்னா வில்லூரியை தேர்தல் செலவின பார்வையாளராகவும், ஐபிஎஸ் அதிகாரி ஷிவ்குமார் வர்மாவை காவல் பார்வையாள ராகவும் நியமித்து இந்திய தேர் தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது  சமீர் டெக்கிரிவால் ஐ.ஆர்.எஸ், மல்லிகார்ஜுன் உட்டரே ஐ.ஆர்.எஸ் ஆகிய மேலும் இரண்டு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து உள்ளது.

தேர்தல் குறித்த புகார்களை  சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் 044 25333098 என்ற தொலைபேசி தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article