சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் பிறப்பித்து உள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள குழந்தைவேல் பதவிக் காலம் கடந்த ஜனவரி 8-ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாததால் அவரது பதவிக்காலம் நீட்டித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டிருந்தது.அதையடுத்து, துணைவேந்தர் பதவிக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் 150 பேராசிரியர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அதில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

தேர்வு செய்யப்பட்டுள்ள 10 பேர் பட்டியலில் இருந்து 3 பேரை ஆளுநர் தேர்வு செய்து, அதில் இருந்து ஒருவரை பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்படுவர். இதற்கான பணியில் ஆளுநர் பன்வாரிலால் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதனை ஆளுநர் பன்வாரிலால் நியமித்துள்ளார். பேராசிரியர் ஜெகன்நாதன், கல்விப்பணியில் 39 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள்.

இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் பிறப்பித்து உள்ளார்.