சென்னை: தமிழ்நாட்டில், அரசு பணிகளுக்கு  தமிழ் கட்டாயம் என அறிவித்த திமுக அரசு, தற்போது ஆசிரியர் பணி தேர்வுக்கு உருது, கன்னட மொழிகள் சேர்த்து அரசாணை வெளியிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் தமிழ் என கூறி இருமொழி கொள்கையை வலியுறுத்தி வந்த திமுக அரசு, தற்போது திடீரென சிறுபான்மை மொழி என்று மற்ற மாநில மொழிகளை அங்கீகரித்து, தமிழர்களை ஏமாற்றி தமிழர்களுக்கு  துரோகம் இழைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கும் வகையில், தமிழில் தேர்ச்சி பெற்றாமல் மட்டுமே அரசு பணிகளில் சேர முடியும் என தமிழ்நாடு அரசு புதிய சட்டத்தை கடந்த ஆண்டு ஜனவரியில் நிறைவேற்றியது. அதன்படி, 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  2023 ஜனவரியில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  தாக்கல் செய்தார்.  அதன்படி,  “தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் திருத்தம் செய்யப்பட்டு அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என 2021 டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை செயல்படுத்தும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.  தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் வேல்முருகன் பேசும்போது, , “திருத்தம் செய்யப்பட்டுள்ள சட்டத்திலும் விண்ணப்பிக்க கூடிய நபர் எவரும் என குறிப்பிடுவதால் பிற மாநிலத்தவரும் தேர்வெழுத வாய்ப்பாக அமையும். வடமாநிலத்தைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் சிலர் ஆட்சியாளர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலத்தில் தமிழை பயின்று அரசுப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றால் என்ன செய்வது?

ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டில் குடியிருக்கும், தமிழர்கள் மட்டுமே தேர்வெழுதும் வகையில் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லை என்றால் இச்சட்டம் பேராபத்தை ஏற்படுத்தி விடும். எனவே இதனை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்”, என்றார்.

அதுபோல பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, “வெளி மாநிலத்தவரும் தேர்வெழுத அனுமதித்தால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கையேந்தும் சூழல் உருவாகும் என்பதால் சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”, என்றார்.

விசிக உறுப்பினர் ஆளூர் ஷாநாவாஸ், “உறுப்பினர்கள் கோரும் திருத்தங்களை மேற்கொண்டால் தமிழக மக்கள் அனைவரும் சட்டத்தை வரவேற்பார்கள்”, என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், இன்றைக்கே இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இன்றைக்கு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வராவிட்டால், தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்பதே ரத்தாகி விடும் என்று விளக்கம் அளித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகள் என அனைத்து அரசு பணிக்களுக்கான தேர்வுகளுக்கும் தமிழ் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இடையில் சிறுபாண்மையினத்தைச் சேர்ந்த சிலர் நீதிமன்றத்தில் தமிழ் கட்டாம் என்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்,. இது தொடர்பான தமிழ்நாடு அரசுதான் முடிவு எடுக்க முடியும் என அறிவித்தது.

இந்த நிலையில், இன்று ஆசிரியர் பணி தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு அரசு அவசரம் அவசரமாக ஆசிரியர் பணிக்காக தேர்வில் சிறுபான்மை மொழிகளை சேர்த்து அரசாணை வெளியிட்டு உள்ளது.

அதாவது, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வில், தெலுங்கு, மலையாளம், உருது, கண்ணடம் ஆகிய சிறுபான்மை மொழிப்பாடங்கள் சேர்க்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள், அரசு பணிக்கான தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறும் நோக்கில், திருத்தம் செய்யப்பட்டு,  அதை  அரசிதழிலும் தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

இந்தி மொழிக்கு எதிராக குரல் கொடுத்து வந்த திமுக அரசு, தற்போது மற்ற மாநில மொழிகளை அரசு பணிக்கான தேர்வில் இணைத்து, தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற மாநில மொழிகளை படிக்க செய்ய விடாமல், தமிழர்களை தடுத்து நிறுத்திய திமுக அரசு, இருமொழி  கொள்கை என்ற பெயரில், தமிழனை குடிகாரமான மாற்றி வரும் நிலையில்,   தற்போது சிறுபான்மை என்ற பெயரில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது மொழி படித்தவர்கள் அரசு பணியில் சேர வாய்ப்பு வழங்கும் வகையில், அரசாணை வெளியிட்டு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.

தமிழ்நாட்டின்கச்சத்தீவு முதல் காவிரி வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமான திமுக அரசு தற்போது தமிழக மக்களின் பல்லாண்டு கோரிக்கையான தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே பணி என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்த நிலையில், தற்போது அதில் திடீரென திருத்தம் செய்து மீண்டும் தமிழர்களுக்கு  துரோக்கத்தை இழைத்துள்ளது.

திமுக அரசின் இந்த துரோகம், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ் தமிழ் என கூறி இருமொழி கொள்கையை வலியுறுத்தி வந்த திமுக அரசு, தற்போது திடீரென சிறுபான்மை மொழி என்று கூறி தமிழர்கள் மற்ற மாநிலமொழிகளை கற்க விடாமல் தடுத்த நிலையில், தற்போது திடீரென எந்தவித முன்னறிவிப்போ, விவாதமோ இன்ற,  மற்ற மாநில மொழிகளை, சிறுபான்மை இன மொழி என அங்கீகரித்து, தமிழர்களை ஏமாற்றி தமிழர்களுக்கு  துரோகம் இழைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தமிழ்நாடு அரசின் பல பணிகளில் மற்ற மாநிலத்தவர்கள் கோலோச்சி வரும் நிலையில், தற்போது வாக்கு வங்கிக்காக, நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக அரசு செயல்பட்டு,   மற்ற மாநில மொழிகளையும் அரசு பணிகளில் இணைத்துள்ளது, தமிழர்களுக்கும், தமிழினத்துக்கும் இழைக்கும் மாபெரும் துரோகம் என்றும்,  வாக்குக்காக தமிழர்களின் வாழ்வாதாரத்தையும், அரசு பணி என்ற கனவையும் குழிதோண்டி புதைத்துள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அண்டை மாநில மாநில மொழிகள் அரசு பணிக்கு உகந்தது எனும்போது, இந்தி, சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, மராத்தி என மற்ற மாநில மொழிகளையும் சேர்ப்பதுதானே சரியான நடவடிக்கையாக இருக்கும். 

இந்தி தெரியாது போடா என கூறிய தமிழனும், தமிழ் ஆர்வலர்களும், இனிமேல் எங்கே செல்வார்கள்…

திமுக அரசின் இந்த துரோக செயல் குறித்து தமிழ்நாட்டைச்சேர்ந்த   எந்தவொரு  ஊடகமும் வாய் திறக்கவில்லை என்பது, தேசத்தின் நான்காவது தூணான ஊடகத்துறைக்கே அவமானம் என்றும் சில சமூக வலைதளங்களில் கடுமையாக சாடி உள்ளனர்.