சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வினாத்தாள் முறைகேடு சம்பந்தமாக மேலும் 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு, வினாத்தாள் முன்கூட்டிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை யினர் விசாரித்து வருகிறது. மேலும் அண்ணா யுனிவர்சிட்டி அமைத்த விசாரணை குழுவினரும் முறைகேடு நடைபெற்றதை உறுதி செய்தனர்.
இந்த நிலையில், கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் முன்ன தாக வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தற்காலிக பேராசிரியர்கள், மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு வினாத்தாள் மற்றும் விடை எழுதுவதற்கான தாளையும் முன்கூட்டியே அளித்தது உறுதியானது. இதன் காரணமாக 4 பேராசியர்கள் தற்போது அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே முறைகேட தொடர்பாக 37 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது பேராசிரியர்கள் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
[youtube-feed feed=1]