சென்னை

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள குயின்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்கா அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார் .

சென்னை பூந்தமல்லி அருகே பழஞ்சூர் குயின்ஸ் லேண்ட் என்னும் தனியாருக்குச் சொந்தமான பொழுது போக்கு பூங்கா அமைந்துள்ளது.    இது இந்த பகுதியில் மிகவும் புகழ் பெற்றதாகும்.   கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கு ஃப்ரீ ஃபால் டவர் என்னும் ராட்டினத்தின் ஒரு பகுதியில் இருந்த ஒயர்கள் அறுந்து விழுதது.

ராட்டினம் உயரத்தில் இருந்து இறங்கிய பிறகு ஒயர்கள் அறுந்ததால் பெருத்த உயர் சேதம் தவிர்க்கப்பட்டது.   இதையொட்டி அப்போது அங்கு அமைந்துள்ள 10 ராட்சத ராட்டினங்கள் இயங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.  இந்நிலையில் இந்த பொழுது போக்கு பூங்கா குறித்து அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குயின்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்கா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என அறிவித்துள்ளார்.  மேலும் சட்டப்போராட்டம் நடத்தி குயின்ஸ் லேண்ட் அமைந்துள்ள நிலம் கோவில் நிலம் என உறுதிப்படுத்தி அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.