டில்லி
தனிமைப்படுத்தப்பட்டுள்ள தப்லிகி ஜமாத் அமைப்பினர் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியும் ஊழியர்களிடம் கேவலமாகவும் நடந்து வருகின்றனர்.
இந்தியாவில் இந்த அளவுக்கு கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக தப்லிகி ஜமாத் அமைப்பினர் நடத்திய மதக் கூட்டங்கள் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் உயிர் இழந்துள்ளனர். இதையொட்டி தப்லிகி ஜமாத் தலைமையகமான நிஜாமுதின் மசூதியில் தங்கி இருந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் இரவு மசூதியில் தங்கி இருந்த 167 தப்லிகி ஜாமத் அமைப்பினர் துக்ளகாபாத் பகுதியிலுள்ள ரயில்வே காலனியில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த ரயில்வே காலனியில் உள்ளவர்கள் இதன்மூலம் தங்களுக்கு கொரோனா பரவக்கூடும் என்னும் அச்சத்தினால் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தீபக் குமார்,”தனிமைப்படுத்தல் விடுதியில் தப்லிகி அமைப்பினர் ஊழியர்களிடம் மிகவும் கேவலமாக நடந்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவைக் குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது எச்சில் துப்புகின்றனர். தனிமை விதிகளை மீறி அந்த பகுதி முழுவதையும் தொடர்ந்து சுற்றி வருகின்றனர்.
நாங்கள் அவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர அதிகம் பேரை நியமிக்க வேண்டும் அல்லது இங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தெற்கு டில்லி மாவட்ட நீதிபதியிடம்,ம் தெரிவித்துள்ளோம். தற்போது இங்கு நான்கு டில்லி காவல்துறை காவலர்களும் ஆறு மத்திய ஆயுதப்படைகாவலற்களும் உள்ளனர். அத்துடன் ஒரு காவல் வாகனம் உள்ளது”எனத் தெரிவித்துள்ளார்
இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் 24 மணி நேரமாகியும் கிருமி நாசினிகள் தெளிக்கவில்லை எனக் கூறி உள்ளனர். கொரோனா அச்சம் கரணமாக இவர்கள் யாரும் அத்தியாவசிய தேவைக்குக் கூட வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர். மேலும் அங்கு தப்லிகி அமைப்பினர் கூட்டி வரப்பட்ட போது பலரும் வேனுக்கு வெளியே வந்ததும் இருமியதாகவும் சாலை எங்கும் எச்சில் துப்பி சளியை சிந்தியதாகவும் இதனால் தங்களுக்கு மேலும் அச்சமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.