லக்னோ:

ந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில்,டெல்லி தப்லிகி ஜமாஅத் நிகழ்ச்சியில் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை தேடி கண்டுபிடித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல  உ.பி.யில் தப்லிகி ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 25 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக  லக்னோ சி.எம்.ஓ டாக்டர் நரேந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 151 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், டெல்லி தப்லிகி ஜமாஅத்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 25 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

“நாங்கள் ஏராளமான மக்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. எனவே, நோயாளியின் குடும்பத்தினர் ஒத்துழைக்க வேண்டும், இல்லையெனில் இந்த சவால்களைச் சமாளிப்பது எங்களுக்கு மிகவும் கடினமா இருக்கும்” என்று உ.பி. அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட (தொற்றுநோய்கள்) இயக்குநர் டாக்டர் விகாசெண்டு அகர்வால் ( ஐ.டி.எஸ்.பி), தெரிவித்திருக்கிறார்.

தேசிய தலைநகரை ஒட்டியுள்ள, நொய்டாவில் 39 பேர், மற்றும் மீரட் மாவட்டத்தில் 19 பேர் என மாநிலம் முழுவதும் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு நிர்வாகம் கண்டறிந்திருக்கின்றது.