புது டெல்லி:
கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்த என்று தெரிந்தும், 3, 000 தப்லிகி உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து வருவதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யெந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், மே 3-ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு நீடிக்கப்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த போதிலும், தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை விடுவிக்கவில்லை என்று கூறினார்.
அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிந்ததும் தப்லிகி ஜமாஅத்தின் 3,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுவிப்பது தொடர்பாக டெல்லி சுகாதார துறை, உள்துறை அமைச்சகத்துக்கு இரண்டு முறை எழுதியுள்ளது. மேலும் அந்த கடித்ததில், தப்லிகி ஜமா உறுப்பினர்களை விடுவிப்பதில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது. டெல்லியின் பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 3,000 பேரும் 21 நாட்களுக்கு மேலாக அங்கேயே தங்கியிருக்கின்றனர் என்பதையும் அந்த கடித்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய டெல்லி சுகாதார அமைச்சர் சத்யெந்தர் ஜெயின், தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த 3,000 பேரிடம் காவல்துறையினர் விசாரணை எதுவும் மேற்கொள்ள வேண்டியிருந்தால் தாராளமாக மேற்கொள்ளலாம் என்றும், அவர்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்த அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
டெல்லியில் நிஜாமுதீனில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லிகி ஜமாஅத்தின் கூட்டம் நாடு முழுவதும் கொரோனா பரவியதற்கு காரணம் என்று சுகாதார அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற தப்லீஹி ஜமாஅத்தின் சில உறுப்பினர்கள், விசா நிபந்தனைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களின் பட்டியல்களை டெல்லி அரசு தனிமைப்படுத்தலின் கீழ் கொண்டு வந்துள்ளது என்றும் அவர் ஜெயின் கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள 3,013 பேரில் 567 பேர் வெளிநாட்டினர் மற்றும் 2,446 இந்தியர்கள். இந்திய நாட்டினரில் 191 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள். நிஜாமுதீனில் உள்ள மார்கஸ் கட்டிடத்திலிருந்து சுமார் 2,346 பேரை அரசாங்கம் வெளியேற்றியது. வெளியேற்றப்பட்டவர்களில், 536 பேர் மருத்துவமனைகளுக்கும், மீதமுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கும் மாற்றப்பட்டனர். டெல்லி அரசு எழுதிய கடிதங்கள் அல்லது விடுவிப்பதற்கான நெறிமுறை குறித்த கேள்விகளுக்கு உள்துறை அமைச்சகம் உரிய பதிலளிக்கவில்லை என்றே தெரிகிறது.