சென்னையின் புறநகர்ப் பகுதியான துரைப்பாக்கத்தில், 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த 38 வயது மதிக்கத்தக்க ஒருவர், கிளினிக் நடத்தி மருத்துவம் செய்துவந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

‘விஜய் கிளினிக்’ என்ற பெயரில் கிளினிக் நடத்திவந்த விஜயகுமார் குறித்து சுகாதாரத் துறைக்கு பல புகார்கள் வந்ததையடுத்து, மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் நடத்திய திடீர் ஆய்வைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, ​​விஜயகுமார் மருத்துவம் படிக்கவில்லை என்பதும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர் சுமார் 10 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

விஜயகுமார் மேற்கு வங்கத்தில் மருத்துவம் படித்ததாகக் கூறி அதிகாரிகளிடம் காட்டிய போலி எம்பிபிஎஸ் சான்றிதழையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சுகாதாரத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், கண்ணகி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

[youtube-feed feed=1]