சேலம் மாநகராட்சி சேவைகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தே பெறும் வகையில் ‘கியூஆர்’ கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கியூஆர் கோடை வீடு, வீடாக சென்று ஒட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பொதுமக்கள் தங்களது செல்போனில் இதனை ஸ்கேன் செய்து மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் முக்கிய திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும், அதன் வழியாகவே புகாரையும் பதிவு செய்யலாம்.

ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் இந்த புகார்களுக்கு சேலம் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.