நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா அவதூறாக பேசிய விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நுபுர் சர்மாவை பா.ஜ.க.வில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றியுள்ள போதும் இது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

கத்தார் நாட்டுக்கான இந்திய தூதரை அழைத்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய தூதர் தீபக் மிட்டல், “தனி நபர்களின் ட்விட்டர் பதிவுக்கு இந்திய அரசு தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. பா.ஜ.க. கட்சியும் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது” என்று பதிலளித்துள்ளார்.

https://twitter.com/sajournal1/status/1533399509471879169

மேலும், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பெறுவணிக நிறுவனங்கள் தங்கள் கடைகளில் உள்ள இந்திய பொருட்களை அகற்றியும் அதன் மீது தடைசெய்யப்பட்ட பொருட்கள் என்ற வாசகத்தோடு மூடியும் வைத்துள்ளனர்.

தவிர அந்நாடுகளில் உள்ள இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் மத குருமார்களும் பா.ஜ.க.வினரின் இந்த பொறுப்பற்ற பேச்சால் கொதித்துப் போயுள்ளனர்.

இதனால் அங்குள்ள நிறுவனங்களில் வேலை பார்க்கும் இந்திய இந்துக்களை பணியில் இருந்து நீக்கவும் சில நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

ஐக்கிய அரபு நாடுகளில் 35 லட்சம் இந்தியர்களும், சவுதி அரேபியா-வில் 15.4 லட்சம் மற்றும் குவைத்-தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இதுவரை இந்தியர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த பா.ஜ.க.வின் பொறுப்பற்ற பேச்சும் நடவடிக்கையும் இந்த விவகாரத்தால் உலகம் முழுதும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்களுக்கு தெரியவந்துள்ளதால் இஸ்லாமிய நாடுகளில் வேலை செய்து வரும் இந்தியர்கள் அச்சத்துடனும் கவலையுடனும் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேச்சு… நுபுர் சர்மா-வை இடைநீக்கம் செய்தது பா.ஜ.க.