லக்னோ :
உலகில் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சையத் மோதி சர்வேதேச பேட்மிண்டன் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
சையத் மோடி சர்வேதேச பேட்மிண்டன் இறுதி போட்டியில் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் பிவி சிந்து வெற்றி பெற்றார். இறுதி போட்டி வரை முன்னேறிய இளம் வீராங்கனை மாளவிகா பன்சோட் வெள்ளி பதக்கம் வென்றார். நாக்பூரை சேர்ந்த 20 வயதான மாளவிகா பன்சோட் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பிடெக் படிக்கிறார். ஏற்கனவே, இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மாளவிகா பன்சோட் சாய்னா நோவாலை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.