ஒலிம்பிக் வீராங்கனை கரோலினாவை வீழ்த்தி சிந்து சாம்பியன்!

Must read

மும்பை:

ந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில் பி.வி.சிந்து சாம்பியன் ஆனார். ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை 21-19, 21-16 என்ற நேர் செட்டில் விழ்த்தினார்.

2017ம் ஆண்டுக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவின்  இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார்.

ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கின்  இறுதி போட்டியில் தன்னை வென்ற  ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை ஆவேசத்துடன் எதிர்கொண்ட சிந்து வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

More articles

Latest article